Sunday, June 19, 2011

படிக்க தடை போட்டதால் மாணவி தற்கொலை முயற்சி!

வசதியின்மை காரணமாக மேற்படிப்புக்குத் தடை ஏற்பட்டதால் மனமுடைந்த இளம் மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனால் உடல் கருகி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள துலாச்சேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவருக்கு 18 வயதான மகள் உள்ளார். இவர் பெயர் சுப்புலட்சுமி. இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு முடித்துள்ளார். மேற்கொண்டு 12 ஆம் வகுப்பு செல்லவேண்டும்.

ஆனால் அவரது பெற்றோர்களுக்குப் பொருளாதார வசதி இல்லாததால், மேற்கொண்டு படிக்கவேண்டாம் என்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நாங்குநேரி காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள்.


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza