Sunday, June 19, 2011

மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை!

மதுரை மாவட்டத்தில் கடந்த ஜன., 1 முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது, இருந்தும் கடந்த 6 மாதம் நிறைவடைந்தும் இந்த உத்தரவு முறைப்படுத்தப் படவில்லை. இதை உடனே நடைமுறைபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொருட்களை விற்பனை செய்பவர்கள், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கைப்பை மற்றும் கலன்களில் உணவுப் பொருட்களை அடைத்து வைப்பது, சேமித்து வைப்பது சட்டப்படி குற்றம்.

குறைந்தபட்ச தடிபடமனாக 20 மைக்ரான் அளவு இருக்க வேண்டும். 20 மைக்ரான் அளவு இல்லாத பிளாஸ்டிக் கப், கேரி பேக் முதலிய பொருட்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் தேதி முதல் தடை செய்யப்பட்டது.

இதற்கு மாற்றாக துணிப் பை, காகிதப் பை, கோப்பைகள், பாக்கு மட்டை தட்டுகள், தென்னை, பனை ஓலை கூடைகள் பயன்டுத்த வேண்டும். விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் பாதிப்பு தொடர்வதற்கு பிளாஸ்டிக் பயன்பாடு ஒரு காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza