Thursday, May 26, 2011

'அரசியல் ரீதியாக இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவோம்!' –காஸா அரசு

"பலஸ்தீன்- இஸ்ரேல் எனும் இருநாட்டுத் தீர்வு முன்மொழிவினைப் புறந்தள்ளி, மிக மோசமான இனவாதத்தைக் கக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை முழு உலகமும் தனிமைப்படுத்த வேண்டும்" என காஸாவிலே உள்ள இஸ்மாயீல் ஹனிய்யா தலைமையிலான பலஸ்தீன் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை (25.05.2011) பலஸ்தீன் அரசதரப்புப் பேச்சாளர் தாஹிர் அல் நூனு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் உரை முழுக்க முழுக்க நயவஞ்சகத்தனமானது" என்றும் , "அவரது சட்டவிரோதக் குடியிருப்புச் செயற்திட்டம் பலஸ்தீன்- இஸ்ரேல் முரண்பாட்டுக்கான தீர்வு குறித்து நம்பிக்கையிழக்கச் செய்வதாகவுமே அமைந்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ மிகத் தந்திரமான முறையில் பலஸ்தீன் தரப்பினரிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, உலக ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதன் மூலம் சர்வதேச அபிப்ராயத்தைத் தமக்கேற்ற வகையில் கட்டமைக்க முயற்சிக்கிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza