தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் மரியம்பிச்சை பெரம்பலூர் அருகே நடந்த விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் பற்றி விசாரித்து உண்மை நிலையை அறிய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அமைச்சர் மரியம்பிச்சை வந்த கார் முன்னே சென்றுக் கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதாக முதலில் கூறப்பட்டது. பிறகு லாரி இடது பக்கம் திரும்பியதாகவும், திடீரென வலது பக்கம் திரும்பியதால் அமைச்சரின் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது விபத்து ஏற்படுத்திய லாரி கேரளா பதிவு எண் கொண்டது என்று தெரிய வந்தது.
அந்த கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக சென்னையில் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் திருச்சி சென்றனர்.
அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். கண் டெய்னர் லாரியா? அல்லது டிப்பர் லாரியா? என்பது தெளிவாகவில்லை.
லாரி எந்த திசையில் தப்பி சென்றது என்பதும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த லாரி சோதனை சாவடிகளை கடந்துதான் சென்று இருக்க வேண்டும் என்பதால் அங்குள்ள ரகசிய கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கேரள பதிவு எண் கொண்ட லாரிகள் திருச்சிக்கு எத்தனை வந்தன? எத்தனை லாரிகள் திருச்சியில் இருந்து திரும்பி சென்றன? என்ற கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இதுதவிர தமிழக கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை அந்த விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. லாரி டிரைவர் சிக்கினால் தான் முழு விவரமும் தெரிய வரும். அமைச்சரின் கார் முன்பாக பைலட் கார் செல்வது மரபு.
பைலட் காரில் செல்லும் போலீசார் சாலையை ஒழுங்குப்படுத்தி அமைச்சர் கார் செல்ல வழி ஏற்படுத்துவார்கள். ஆனால் மரியம்பிச்சை கார் சென்னைக்கு வந்தபோது பைலட் கார் முன்னதாக வரவில்லை.
அமைச்சர் கார் வேகமாக வந்துவிட்டதால் பைலட் கார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி விட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் கார் தொடர்ந்து வேகமாக சென்றதால் பைலட் காரால் முன்பாக செல்ல இயலவில்லை. இதுவும் போலீஸ் கவனக் குறைவு என்ற புகார் எழுந்துள்ளது.
அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மகேஸ்வரன், திருச்சி அ.தி.மு.க.வினர் கார்த்திகேயன், சீனிவாசன், சரவணன், வெங்கடேசன் ஆகியோரிடமும் விசாரணை நடத்துகின்றனர். அப்போது விபத்து நடந்தது எப்படி?
திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு அமைச்சர் மரியம்பிச்சை காரில் புறப்பட்டது முதல் விபத்து நடந்த காலை 7.15 மணி வரை நடந்தது என்ன என்று விசாரிக்கிறார்கள். அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. முதலில் அரசு காரான ஸ்கோர்பியோ காரில்தான் மரியம்பிச்சை பயணம் செய்தார்.
அதன்பிறகு சமயபுரம் அருகே அரசு சார்பில் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட இன்னோவா காருக்கு மாறி உள்ளார். அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் செல்லும் போதும் பேட்ரோல் ரோந்து போலீசார் அந்தந்த ஊர் எல்லை வரை வந்து பாதுகாப்பு அளிப்பார்கள். நேற்று பேட்ரோல் போலீசார் வாகனம் உடன் செல்ல வில்லை.
அமைச்சர் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் காருக்கு முன்னால் செல்லாமல் பின்னால் சென்றது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது அமைச்சர் தரப்பில் பேசியவர்கள் வேகமாக செல்ல வேண்டிய திருப்பதால் காருக்கு பின்னால் வரும்படி அமைச்சர் காரில் இருந்தவர்கள் கூறியதாக ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த உத்தரவை பிறப்பித்தவர் யார்? அமைச்சர் அனுமதியுடன் போலீஸ் வாகனம் பின்னால் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. அமைச்சர் மரியம்பிச்சை மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் அனைத்தையும் போலீசார் தொகுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகம் முழுக்க முழுக்க கார் டிரைவர் ஆனந்த் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் மீதுதான் உள்ளது. ஆனந்த் சொல்வது உண்மையா என்பது கண்டெய்னர் லாரி டிரை வரை பிடித்தால்தான் தெரியும். கண்டெய்னர் லாரி டிரைவரை பிடிக்க தமிழகம் முழுவதும் அனைத்து சோதனைகள் சாவடிகள், போலீஸ் நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. சோதனை சாவடிகளில் 23.05.2011 காலை 7.30 மணி முதல் பதிவான கண் டெய்னர் லாரிகள் விவரம் பற்றி தகவல் திரட்டப்பட்டு வருகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment