வேலைவாய்ப்பிற்கான பதிவை பள்ளிக்கூடத்திலேயே செய்து கொள்ளும் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பிளஸ் 2 முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை நீக்குவதற்காக மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெற்றவர்கள் அங்கேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.இன்று முதல் பள்ளிகளில் +2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த வசதி இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் கிடைத்த 15 நாட்களுக்குள் பதிவு செய்து வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை மாணவர்கள் பெறலாம். மதிப்பெண் சான்றிதழ் பெற செல்லும் மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் அதனுடைய நகலினை எடுத்துச் செல்ல வேண்டும்.
0 கருத்துரைகள்:
Post a Comment