Wednesday, May 25, 2011

பலஸ்தீன் விளைநிலங்களுக்கு அச்சுறுத்தல்: ஆக்கிரமிப்பாளரின் அராஜகம்!

மேற்குக் கரையின் பெய்ட் ஊலா கிராமத்தைச் சேர்ந்த ஆறு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பயிர் நிலங்கள் வெகுவிரைவில் புல்டோஸர் மூலம் அழித்து நிர்மூலமாக்கப்படும் என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை முன்னறிவிப்புப் பத்திரம் வழங்கியுள்ளது.

பெய்ட் ஊலா நகரசபைத் தலைவர் ராதிப் அல் இம்லேஹ் குறிப்பிடுகையில், "முன்னறிவிப்புப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி பார்க்கும் போது, இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு அருகில் உள்ள ஜல்மோன், துவாஸ் பகுதிகளை அடுத்துள்ள நான்கு குடிநீர்க் கிணறுகளும், அதனைச் சுற்றியுள்ள மிகப் பெரும் பயிர்நிலப் பரப்பும் அழிக்கப்படவுள்ளதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலப்பரப்பில் நன்கு வளர்ந்துள்ள ஒலிவ் முதலான கனிதரும் மரங்களும் பிடுங்கியெறியப்படவுள்ளன' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
 
"பலஸ்தீன் மக்களின் பொருளாதார அடித்தளத்தைச் சிதைப்பதே இத்தகைய ஸியோனிஸ அழிப்புக் கொள்கையின் பிரதான இலக்காகும்" என்று அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற பயிர்நில நிர்மூலம் குறித்த மேலும் 16 முன்னறிவிப்புப் பத்திரங்கள் மேற்குக் கரையின் தெற்குப் பகுதியில் வாழும் பலஸ்தீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில், அந்த நிலங்கள் யாவும் இஸ்ரேலிய அரசுடைமைச் சொத்துக்கள் என்ற வகையில், அவற்றை அபிவிருத்தி செய்யும் உரிமை பலஸ்தீனர்களான நிலச் சொந்தக்காரர்களுக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் இந்த முன்னறிவிப்பினால் நிலச் சொந்தக்காரர்களான பலஸ்தீன் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza