Thursday, May 26, 2011

சவூதி அரேபியாவில் இரத்ததான முகாம்

சவுதி அரேபியாவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சார்பாக அதன் தலைநகர் ரியாதில் இம்மாதம் 27 ம் தேதியன்று இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற தமிழக இஸ்லாமிய அமைப்பின் ரியாத் கிளை நடத்தும் இந்த முகாம், ரியாத் மாநகரின் மிகப்பெரும் மருத்துவமனையான கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெறவுள்ளது.

மே மாதம் 27ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்குத் துவங்கும் இம்முகாம் மாலை 4.45 மணி வரை நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மணடல இரத்ததான

ஒருங்கிணைப்பாளர் ஃபெய்ஸல் கூறியதாவது:

"இரத்த தானம் வழங்குபவர்களுக்கு வசதியாக ரியாதின் பல பகுதிகளிலிருந்து கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டிக்கு இலவசமாக வாகன வசதிகள் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 11 வது இரத்ததான முகாமான இதில் சுமார் 300 பேர் இரத்தக் கொடையளிக்க இருக்கின்றனர். இரத்ததானம் வழங்குவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் சவுதி அரேபியாவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது." என்று கூறினார்.

இந்த இரத்த தான முகாம் தொடர்பான விவரங்களைக் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்:

ஃபெய்ஸல் : 0507809247, மாஹீன் : 0542540860

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza