பரிதாபாத் அருகே, நேற்று புதன்கிழமை இரவு 7 பயணிகள் 2 பைலட்டுகளுடன் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக மக்கள் வாழும் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியது.
சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. அதில் சிகிச்சைக்காக செல்லும் ஒரு நோயாளியும், அவருக்குத் துணையாக மருத்துவர், நர்ஸ் உட்பட 6 பேரும் சென்றுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 10.45 மணி அளவில், ஹரியாணா மாநிலம் பரிதாபாத்திலுள்ள, விமானப்படை விமான நிலையம் அருகே மக்கள் வசிக்கும் பார்வதி காலனி பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் மற்றும் கட்டிடத்திலிருந்த 3 பேர் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஏதேனும் உயிர்ச் சேதம் உள்ளதா என்பது தெரியவில்லை.
சம்பவம் நடந்த இடத்துக்கு விமானப் போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் விரைந்து சென்றுள்ளனர். மோசமான காலநிலையும் தூசுக்காற்றுமே விபத்துக்கான காரணம் எனக்கூறப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment