Saturday, May 28, 2011

அப்சல் குருவும், ஹிந்துதுவாவும்! ஒரு பார்வை!!

2001, டிசம்பர் 13-ம் தேதி, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றத்தின் ஒரு அலுவலரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான அப்சல் குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

ஒரே ஒரு நபர் துப்பாக்கியுடன் உள்ளே சென்றிருந்தால் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனவே, அப்சல் குரு சமர்ப்பித்துள்ள கருணை மனுவை விரைவில் தள்ளுபடி செய்து அவருக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: அப்சல் குருவுக்கு தண்டனை கொடுப்பது இருக்கட்டும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் நிகழ்த்திய தீவிரவாத நடவடிக்கைகள் எத்தனை எத்தனை முதலில் இவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

மும்பை கலவரம், பகல்பூர் கலவரம், மீரட், குஜராத், பீவாண்டி, கோவை, இப்படி இவர்கள் நடத்திய கோர கலவரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் நாடறிந்தது.

இதில் சிக்கி சிறையில் இருக்கும் ஹிந்துவா தீவிரவாதிகள் முதலில் தண்டிக்கப்படவேண்டும்.ஏன் என்றால் இவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்திய கலவரங்களின் பின்னணியே இது போன்ற அப்சல் குருக்கள் உருவாக காரணமாக அமைந்தது.

இந்தியாவின் சாபக்கேடு இந்த சங்கபரிவார் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகள்தான். இவர்கள் நடத்திய கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பதில் நடவடிக்கையே இதுபோன்ற நிகழ்வுகள்.

இந்த பாசிச ஹிந்துத்துவா சக்திகளை இந்தியாவில் இருந்து ஒழித்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் தீரும். ஒரு அப்சல் குருவை தூக்கில் போடுவதால் எந்த பிரோஜனமும் இல்லை.

நரேந்திர மோடி, அத்வானி, பால்தாக்ரே, முரளி மனோகர் ஜோதி, போன்ற வெளியே இருக்கும் தீவிரவாதிகளை முதலில் தூக்கில் ஏற்றவேண்டும். அப்போதான் இந்த நாட்டில் நிரந்தர அமைதி நிலவும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza