OurUmmah:எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.
எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.
இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் காஸா மீதான முற்றுகை சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசு இஸ்ரேலுடன் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அமுல்படுத்தி வந்துள்ளது இந்த நிரந்தர எல்லை திறப்பு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் கொள்கையில் இருந்து எகிப்து பெரிதும் விலகி வெல்வதை தெளிவாக காட்டும் விடயமாக இருக்கும் என்று எதிர்பார்களாம்.
வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி அவரின் கட்டுரை ஒன்றில் காஸா மீதான முற்றுகை நீதியற்றது என்றும் எகிப்து இஸ்ரேலுகிடையான முபாரக்கின் கேம் டேவிட் – Camp David Accords- உடன்படிக்கை எகிப்துக்கு பல சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார் இந்த அவரின் நிலைபாட்டை ஹமாஸ் பாராட்டியதுடன் அவரின் இந்த நிலைப்பாடு அவரின் புதிய பதவிகாலத்தில் வெளிப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment