Wednesday, June 1, 2011

சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் வழிந்த பெட்ரோலை பிடித்த 5 பேர் பலி! 20 பேர் படுகாயம்!!

கவுகாத்தியில் இருந்து ஜோர்காட் என்ற இடத்துக்கு ஒரு டேங்கர் லாரி, நேற்று முன்தினம் ஞாயிறு அன்று இரவில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. கோலகட் மாவட்டத்தில் உள்ள பாடுலிபரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலை வளைவில் தடுமாறி கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தின் காரணமாக சாலையில் பெட்ரோல் ஆறாக ஓடியது. இதக் கண்ணுற்ற அக்கம்பக்கத்தில் உள்ள கிராம மக்கள்திரண்டு வந்து, சாலையில் வழிந்தோடிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தாழ்வாக சென்று கொண்டிருந்த ஒரு மின்சார ஒயர், லாரியின் டேங்கருக்குள் விழுந்துவிடவே, திடீர் என டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

எதிர்பாராமல் திடீரென்று தீப்பற்றியதால், பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த 5 பேர் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். பலத்த தீக்காயம் அடந்த அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் வீடு ஒன்றும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை சிரமத்துடன் போராடி அணைத்தனர். மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு படையினர் மிகவும் காலதாமதமாக நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு வந்துள்ளனர். அதனால், கடும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த படையினரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza