உலகின் மிகப்பெரிய சிகரம் என அழைப்படுவது ஹிமாலய மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரம்(8850 அடி உயரம்). இங்கிலாந்தின் லண்டன் நகரில் சர்பிடான் பகுதியைச் சேர்ந்த அட்கின்ஸான்(16) என்ற பள்ளி மாணவர் நேபாள், சீனா, இங்கிலாந்து மலையேற்றக் குழுவினருடன் திபெத் பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்டான் 28.05.2011 அன்று வெற்றிகரமாக எவெரஸ்ட் சிகரத்தை அடைந்ததாக மலையேற்றக்குழுவின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜானிகொலிஸ்ன்(17) சிறுவன் தான் இந்த சாதனையை எட்டியிருந்தார். அவரது சாதனையை அட்கின்ஸான்(16) முறியடித்துள்ளான்.
மேலும் இன்னும் மூன்று நாட்களில் இவர் தனது 17வது வயதினை கொண்டாட உள்ளார். அதற்கு முன்னதாகவே 16 வயதில் இந்த சாதனையை எட்டியுள்ளார்.முதன்முதலாக கடந்த 2005ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள கிளிமஞ்சரோ மலையில் ஏறி தனது மலையேற்ற பயிற்சி துவக்கினான். இதுவரை 6 மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்த அட்கின்ஸான் 7வதாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்து இந்த சாதனையை படைத்துள்ளான்.
0 கருத்துரைகள்:
Post a Comment