Tuesday, April 19, 2011

பினாயக் சென் ஜாமீனில் விடுதலையானார்

BINAYAK_1
ராய்ப்பூர்:பிரபல மனித உரிமை ஆர்வலரும்,மருத்துவருமான பினாயக் சென் ராய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து இன்று(18/04/2011) ஜாமீனில் விடுதலையானார்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி மூன்று தினங்களுக்கு பிறகு பினாயக் சென்னுக்கு சிறையில் விடுதலைப் பெறுவது சாத்தியமானது.

தேசத்துரோகம்,மாவோயிஸ்ட் தொடர்பு என குற்றங்களை சுமத்தி சட்டீஷ்கர் மாநில விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சென் மீது இக்குற்றங்களை நிரூபிக்க இயலாது என சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza