காஸர்கோடு:எண்டோஸல்ஃபான் கிருமி நாசினியை தடைச்செய்ய தயாராகாத மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா வலியுறுத்தியுள்ளார்.
இம்மாதம் 23-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உலக சுற்றுச்சூழல மாநாட்டில் இந்தியா எண்டோஸல்ஃபானுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள வலியுறுத்தி எண்டோஸல்ஃபான் எதிர்ப்பு குழுவின் தலைமையில் காஸர்கோடு நகராட்சி மாநாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கன்வென்சனில் தலைமையுரை ஆற்றினார் அவர்.
எண்டோஸல்ஃபான் கிருமி நாசினியை தடைச்செய்ய சரத்பவார் தயாராகாததற்கு காரணம் அவர் ஊழல்வாதி என்பதாலாகும். ஊழல் என்பது பணத்தை மட்டும் மையமாக கொண்டதல்ல. சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு கேடு உருவாக்குவதும் ஊழலில் உட்படும் என அவர் கூறினார்.
ஆராய்ச்சியாளர்களும்,அமைச்சர்களும் எண்டோஸல்ஃபான் விவகாரத்தில் மெளனிகளாகவும், அச்சுறுத்தலுக்கு அடிபணிவர்களுமாவர். எண்டோஸல்ஃபானை தடைச்செய்யும் விஷயத்தில் தெளிவில்லை எனக்கூறி சரத்பவார் பாராளுமன்றத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைத்துள்ளார்.
இதற்கு விஞ்ஞானிகள் துணை போயுள்ளனர். எண்டோஸல்ஃபான் போன்ற கொடூரமான கிருமி நாசினிகளை விவசாயத்திற்கு அல்ல உபயோகித்தது. போர் பூமியில் மனிதர்களை கொலை செய்வதற்காக விஷமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்று விவசாயம் மூலமாக மனிதர்களை கொலை செய்கின்றனர். இவ்வாறு வந்தனா சிவா உரை நிகழ்த்தினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment