Friday, April 22, 2011

இதுவே ஒரு முஸ்லிம் என்றால்… ???

question-mark
கூடலூர்:கம்பத்திலிருந்து அரசு பஸ்சில் கேரளாவிற்கு கடத்த முயன்ற வெடிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் குமுளி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கம்பத்திலிருந்து குமுளிக்கு சென்ற அரசு பஸ்சில் இருந்த துணி பைகளில், பாறைகளை வெடிக்க பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 600 டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிபொருட்களை கொண்டு வந்த கே.கே.பட்டியை சேர்ந்த மொக்கைராஜ் (51) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் கேரள மாநிலம், தொடுபுழா பகுதியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி பொருட்கள் கொண்டு செல்வது தெரிந்தது. முறையான ஆவணம் இல்லாததால் வெடிபொருட்களை பறிமுதல் செய்து, மொக்கைராசுவை போலீசார் கைது செய்தனர்.

மொக்கை ராசு முகைதீன் பிச்சையாக இருந்தால் என்னவாகும் நிலைமை? தமிழகமே அல்லோல கல்லோலப்பட்டிருக்குமே!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza