Wednesday, April 20, 2011

அப்துல்நாஸர் மஃதனி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு

MADANI_1
பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல்நாஸர் மஃதனி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருகிற வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.

நீதிபதிகளான ஞான் சுதா மிஷ்ரா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இம்மனுவை பரிசீலிக்கும். அப்துல் நாஸர் மஃதனி மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் மட்டுமே இவ்வழக்கில் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை ஆஜர்படுத்த அரசு தரப்பால் இயலவில்லை என ஜாமீன் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
2008 ஜூன் 25-ஆம் தேதி பெங்களூரில் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது அப்துல் நாஸர் மஃதனி சம்பவ இடத்தில் இல்லை. இதனை அரசு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அப்துல் நாஸர் மஃதனிக்கு குண்டுவெடிப்புடன் நேரடி தொடர்பு இல்லை என்பதை இது தெளிவுப்படுத்துகிறது. சதித்திட்டம் தீட்டப்பட்டதை நிரூபிக்கும் எவ்வித ஆதாரத்தையும் ஆஜர்படுத்த அரசு தரப்பால் இயலவில்லை. இவ்வாறு ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்திருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza