ஸ்ரீநகர்:புதன்கிழமை வாக்குப்பதிவு துவங்கிய பொழுது முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஃபரீதா பானு(வயது40)விற்கு கவலை குடிக்கொண்டிருந்தது. வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வருவார்களா? என்பதுதான் அவரது கவலை.
பக்தாம் மாவட்டத்தில் ஷேக்பூரா கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களின் கூட்டம் அதிகரித்த பொழுது அவரது கவலையும் நீங்கியது. பத்து மணியளவில் 28 சதவீத வாக்குகள் பதிவாகின.
கஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவுற்ற பொழுது 78 சதவீத வாக்குகள் பதிவாகின. கஷ்மீர் வரலாற்றில் அதிகமாக மக்கள் பங்கேற்ற 2008 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை உள்ளாட்சித் தேர்தல் முறியடித்துள்ளது.
போராளிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பையும் மீறி மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் அமைதியாக நடந்தது. லஷ்கர்-இ-தய்யிபாவின் சுவரொட்டிகள் வாக்குப் பதிவிற்கு எதிராக சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. போராளிகளின் கோட்டையாக கருதப்படும் குப்வாரவில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின. 16 கட்டங்களாக கஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment