Thursday, April 21, 2011

எகிப்து:துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது ஹுஸ்னி முபாரக் – உண்மை கண்டறியும் குழு ஆய்வில் தகவல்

mobarak-3
கெய்ரோ:ஜனவரி மாதம் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 850 கொல்லப்பட்டுள்ளனர் என உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது. மூன்று வாரம் நீண்ட கலவரத்திற்கு பொறுப்பு பதவி விலகிய ஹுஸ்னி முபாரக் என அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போராட்டம் நடத்திய மக்களின் நெஞ்சு மற்றும் தலையை நோக்கி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு கூறுகிறது.

எதிர்ப்பாளர்கள் மீது ஆயுதம் ஏந்திய கும்பலை ஏவி தாக்குதல் நடத்தியதற்கு காரணம் ஹுஸ்னி முபாரக்தான் என நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். முபாரக்கின் உத்தரவின்படி உள்துறை அமைச்சர் ஹபீப் அல் ஆதில் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார்.

உமர் மர்வான் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு 17,058 அதிகாரிகளிடமிருந்தும் நேரடி சாட்சிகளிடமிருந்தும் ஆதாரங்களை சேகரித்து, 800 வீடியோ க்ளிப்பிங்குகளை பரிசோதித்த பிறகே இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது.

ஆட்சியை மகனிடம் ஒப்படைப்பதற்கான முபாரக்கின் முயற்சிதான் மக்களை எழுச்சியை நோக்கி கிளர்ந்தெழச்செய்த காரணங்களில் ஒன்று என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முபாரக்கை விசாரணை செய்த பிறகு குற்றவாளி என கண்டறிந்தால் மரணத்தண்டனையோ, ஆயுள் தண்டனையோ வழங்கப்படும். முபாரக்கின் மகன்களான அஃலா, ஜமால் ஆகியோர் விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza