Thursday, April 21, 2011

2 மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்தது சீனா

human activist
பீஜிங்:சீன போலீஸார் கைது செய்த இரண்டு பிரபல மனித உரிமை வழக்கறிஞர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். ஜியாங் டியான்யாங், லியு க்ஸியாயுவான் ஆகியோர் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞர்களாவர்.

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் மனித உரிமை மீறல்களைக் குறித்து கேள்வி எழுப்பி, அரசு கொடுமைகளுக்கு எதிராக போராடும் ஜியாங் டியான்யாங்கை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சீன போலீஸார் கைது செய்தனர்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர் வீடு திரும்பியுள்ளதாக அவருடைய மனைவி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

லியு க்ஸியாயுவான் கடந்த ஒருவாரத்திற்கு காணாமல் போனார். சீனாவில் மக்கள் குழுக்களில் தனது தலையீடுகளைக் குறித்தும், என்னென்ன நடவடிக்கைகளை மக்கள் குழுக்கள் மேற்கொள்கின்றன என்பதுக் குறித்தும் விசாரணை அதிகாரிகள் கேட்டதாக லியு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சிறையில் போலீஸ் நடந்துக்கொண்ட முறைகளைக் குறித்து கேட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். பீஜிங் விமானநிலையத்தில் பறவைக்கூடு கலைஞர் அய்வெய்வாவின் விடுதலைக்காக முயன்றதைத் தொடர்ந்து தன்னை சீன போலீஸ் கைது செய்தது என லியு தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்ப்பாளர்கள் 50 நபர்களைக் குறித்து விபரங்கள் இல்லை என ஹாங்காங்கை மையமாக வைத்து செயல்படும் மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது. இவர்களை சீன போலீஸ் அநீதமாக காவலில் வைத்துள்ளது என அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza