ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராணுவத்தினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இயந்திர துப்பாக்கிகளும், கிரேனேடுகளும் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. ஏடன் நகரத்தில் ராணுவத்தின் ரோந்தை எதிர்ப்பாளர்கள் தடுத்தனர்.
முப்பது ஆண்டுகளாக பதவியில் தொடரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவைக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஸாலிஹிற்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய முயலும் ஜி.சி.சி நாடுகளின் கோரிக்கை எதிர்ப்பாளர்கள் நிராகரித்துவிட்டனர். துணை அதிபருக்கு அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டுமென்பது ஜி.சி.சி மத்தியஸ்த குழு முன்வைத்த கோரிக்கையாகும்.

0 கருத்துரைகள்:
Post a Comment