Thursday, April 14, 2011

கணவனை தீவைத்துக் கொன்ற இந்திய பெண்ணின் தண்டனை ரத்து

மெல்பர்ன்:அந்நிய பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உருவான தகராறில் கணவனை தீவைத்துக் கொன்ற வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணின் தண்டனையை ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரத்துச்செய்தது.

கணவனை தீவைத்துக் கொல்லவேண்டும் என்ற கோபம்  ரஜனி நாராயணனுக்கு(வயது 45) அத்தருணத்தில் உருவான குழப்பமற்ற நிலை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜனி தனது கணவன் மீது தீவைத்தார். கடுமையான காயமடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் வைத்து இறந்தார். 

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரஜனிக்கு நீதிமன்றம் 6 வருடம் சிறைத்தண்டனை அளித்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜோன் சுலன், குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காக ஆத்மார்த்தமாக வருந்துகிறார் என குறிப்பிட்டார்.

அந்நிய பெண்ணுடன் தொடர்பை வைத்திருந்த கணவனை தடுப்பதற்கு தீக்காயம் ஏற்படுத்த ஜோதிடர் ஆலோசனை கூறியதாக ரஜனி நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரஜனிக்கு இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பில் வாழ உத்தரவிட்ட நீதிமன்றம் அவரை உளவளப்படுத்தலுக்கு (கவுன்சிலிங்) உட்படுத்த உத்தரவிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza