துபாய்:பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தாள்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவருக்கும், விஜயசங்கர் என்பவருக்கும் திருமணமாகி, 15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவள் நந்தனா (8).ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், நேற்று மாலை நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சித்ரா தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்த போது நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கினாள். உடனடியாக அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். சிறுமி நந்தனா செயல்திறன் குறைபாட்டுடன் (ஆட்டிசம்) இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் நந்தனாவை சோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

0 கருத்துரைகள்:
Post a Comment