Friday, April 8, 2011

சிறுமி பாலியல் பலாத்காரம்: மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுவித்தது


DubaiCourts
துபாய்:நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துபாய் போலீசாரால் கைதுச்செய்யப்பட்ட மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுதலைச்செய்துள்ளது.இவர்கள் குற்றம் செய்ததற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சம்பவம் நிகழ்ந்த நாளில் சிறுமி அணிந்திருந்த ஆடையை பரிசோதித்த ஃபாரன்சிக் நிபுணர்களால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிராக ஆதாரங்களை கண்டறிய இயலவில்லை.சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டாளா? என்பதை கண்டறிய துபாய் சட்ட அமைச்சகம் நியமித்த மருத்துவ குழுவின் அறிக்கையும் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் நீதிமன்றம் கண்டறிந்தது.
விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டோர் குற்றத்தை ஒப்புக்கொண்ட விவகாரம் விஞ்ஞானரீதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் நிலை நிற்காது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி பள்ளிக்கூட பேருந்தில் வைத்து சிறுமியை டிரைவர் உள்பட 3 பணியாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி துபாய் போலீஸில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் துபாய் மாடர்ன் ஹைஸ்கூல் பணியாளர்களான 3 பேரையும் கைதுச்செய்தது.மூன்றுமாதமாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் இவர்களை நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகள் விடுதலைச் செய்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza