புதுடெல்லி:திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தகவல் தொடர்புத்துறை மத்திய அமைச்சர் ஆ.ராசா, தனக்கு சிறையில் வழங்கப்படும் உணவு நன்றாக இல்லை என நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆ.ராசா உள்ளிட்டோர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்பொழுது அவர்கள் நீதிபதியிடம், ‘சிறையில் எங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், நன்றாகவும் இல்லை’ என தெரிவித்தனர். ஆ.ராசாவுடன் சிறையிலடைக்கப்பட்டுள்ள உதவியாளர் ஆர்.கே.செந்தாலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இப்புகார் பின்னர் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறையில் சாதாரண சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவுதான் ராசா உள்ளிட்டவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment