புதுடெல்லி:ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் தேசிய தலைவராக(அமீர்) மெளலானா ஜலாலுத்தீன் உமரி இரண்டாவது முறையாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஓக்லா அபுல் ஃபஸலில் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் நடந்த தேசிய பிரதிநிதி சபை கூட்டத்தில் வைத்து ஜலாலுத்தீன் உமரி தேர்வுச் செய்யப்பட்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்ட ஜலாலுத்தீன் உமரி தற்பொழுது மீண்டும் தேசிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆற்காட்டைச் சார்ந்த ஜலாலுத்தீன் உமரி உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம், அலிகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.
1954-ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய ஜலாலுத்தீன் உமரி மார்க்க ரீதியான ஆய்வாளரும், அறிஞருமாவார். இவர் பல்வேறு இஸ்லாமிய மார்க்க நூல்களை எழுதியுள்ளார். வருகிற 4 ஆண்டுகளுக்கு ஜலாலுத்தீன் இப்பதவியில் தொடர்வார்.
0 கருத்துரைகள்:
Post a Comment