Thursday, April 7, 2011

மலேகான்-2:விசாரணையை என்.ஐ.ஏ ஏற்றது

malegaon_blast_2
புதுடெல்லி:2008-ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையிடமிருந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஏற்றுக்கொண்டது.
ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் நடத்திய குண்டுவெடிப்புகளின் விசாரணையை ஒரே புலனாய்வு ஏஜன்சியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியாக மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது தொடர்பான அறிவிக்கையை நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. ஏ.டி.எஸ்ஸின் வழியில் இவ்விசாரணை தொடரும் என அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய உள்ளிட்ட 12 பேரை இவ்வழக்கில் ஏற்கனவே ஏ.டி.எஸ் கைது செய்திருந்தது.
ஏ.டி.எஸ் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ராம்ஜி கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைது செய்ய என்.ஐ.ஏவால் இயலும் என மூத்த ஏ.டி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேதான் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையின் மூலம் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை வெளிக்கொணர்ந்தார்.
என்.ஐ.ஏ விசாரணையை ஏற்றுக்கொண்டது குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், புலனாய்வு குழுவினரை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. மக்கா மஸ்ஜித், அஜ்மீர் வழக்குகள் என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதற்கான கடைசிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க பா.ஜ.க தலைமையிலான மத்திய பிரதேச அரசு தயாரில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza