Sunday, April 17, 2011

ஹஸன் அலி வழக்கு:புதுச்சேரி ஆளுநரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தும்

iqbalsinghhasanali295
புதுடெல்லி:கோடிக்கணக்கான பணத்தை வரி ஏய்ப்புச் செய்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடுச் செய்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் கைவசப்படுத்திய ஹஸன் அலி கானுக்கெதிராக வழக்கு பதிவுச்செய்துள்ள அமலாக்கப் பிரிவு இயக்குநரகம்(என்ஃபோர்ஸ்மெண்ட்) இதுத் தொடர்பாக புதுச்சேரி ஆளுநரையும், உத்தரபிரதேச மாநில அரசின் முதன்மை செயலாளரையும் விசாரிக்க உள்ளது.
புதுச்சேரி ஆளுநர் இக்பால் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள அமலாக்கப் பிரிவு உத்தரபிரதேச மாநில அரசு முதன்மைச் செயலாளர் விஜய் சங்கர் பாண்டேவுக்கு அடுத்த வாரம் சம்மன் அனுப்பும்.

வழக்குடன் தொடர்புடைய பீகார் மாநிலத்தின் அரசியல் தலைவரான அமலேந்து பாண்டேவை விசாரித்த பிறகு விஜய் சங்கருக்கு சம்மன் அனுப்பப்படும்.

ஹஸன் அலிகான் பாஸ்போர்ட் பெற்றது மற்றும் வெளிநாடுகளில் முதலீடுச் செய்தது தொடர்பாக இருவரையும் விசாரிக்க சம்மன் அனுப்பியுள்ளதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.

அமலாக்கப் பிரிவின் கஸ்டடியில் இருக்கும் ஹஸன் அலிகானின் கூட்டாளி காசிநாத் தபூரியாவை விசாரணைச் செய்தபிறகு அமலேந்துவை விசாரிக்க திட்டமிடப்பட்டது. ஹஸன் அலிகான் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாட்னாவிலிருந்து பாஸ்போர்ட் பெற்றது தொடர்பாக நேற்று முன்தினம் அமலேந்துவை நேற்று முன்தினம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. அதில், இக்பால் சிங் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது ஹசன் அலி பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்தது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரிப்பதற்காக இக்பால் சிங்குக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது அமலாக்கத் துறையின் பிடியில் இருக்கும் காசிநாத் தபூரியாவிடமும் விசாரணை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே,இக்பாலுக்கு எந்த விசாரணை அமைப்புகளும் சம்மன் அனுப்பவில்லை என்று புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ஜெ.பி. சிங் கூறினார். ஹசன் அலியை யாரென்றே தெரியாது என  ஆளுநர் இக்பால் சிங் கூறியுள்ளார். எனினும் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப் பரிந்துரை செய்தது உண்மைதான் என்று அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே ஹசன் அலியுடன் தொடர்புடையதாக கூறப்பட்ட உத்தரபிரதேச முதன்மைச் செயலாளர் விஜய்சங்கர் பாண்டே பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து உத்தரபிரதேச அமைச்சரவை செயலாளர் ஷாஷங்க் சேகர் கூறுகையில், ஹசன் அலியுடன் உத்தபிரதேச அரசுக்கோ அல்லது முதல்வர் அலுவலகத்திற்கோ எந்தவித சம்பந்தமும் இல்லை. ஹசன் அலியுடன் விஜய்சங்கர் பாண்டேக்கு ஏதாவது தொடர்பு இருந்தால் அதை அவர் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வார்.

 ஹசன் அலி விவகாரத்துக்கும் உத்தபிரதேச அரசுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்பதை தெளிவுபடுத்தவே இந்த விளக்கத்தை அளித்துள்ளார் அவர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza