Wednesday, April 6, 2011

ஏப்ரல் 8ம் தேதி ஐபிஎல்4 தொடக்கம்: 51 நாள் அதிரடி 74 அட்டகாச போட்டிகள்

ipl
உலகக் கோப்பையை வென்ற சூட்டோடு சூடாக இந்திய அணி வீரர்கள் ஆளுக்கு ஒரு அணியாக பிரிந்து வருகிற 8ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நான்காவது ஐபிஎல் தொடரில் அதிரடி வேட்டையில் குதிக்கவுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்ற கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியவில்லை. அந்த சூடே இன்னும் ஆறாத நிலையில், 8ம் தேதி ஐபிஎல் 4ம் சீசன் தொடங்குகிறது.
74 போட்டிகளுடன் 51 நாட்கள் நடைபெறவுள்ள இந்த டுவென்டி 20 திருவிழாவை கண்டு களிக்க, வென்றவர்களை ரசிக்க கோடானுகோடி கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza