அர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, சமூக இணைய தளமான ஃபேஸ் புக்கில் இணைந்துள்ளார்.அவர் இணைந்த ஒரு சில மணி நேரத்திலேயே உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் அவரது ரசிகராக ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளனர். இதுவரை 70 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பேஸ் புக் மூலம் லட்சக்கணக்கானோருடன் இணைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தனது பதிவில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
23 வயது இளம் வீரரான மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா தேசிய அணி மற்றும் லா லிகா, பார்சிலோனா அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.
பிரபல கால்ந்தாட்ட வீரர் மரடோனா இவரை தனது விளையாட்டு வாரிசு என்றே அறிவித்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை மெஸ்ஸி இருமுறை வென்றுள்ளார்.
மற்றொரு பிரபல சமூக இணைய தளமான டுவிட்டரில் அவர் இன்னும் இணையவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment