
புதுடெல்லி:போபால் விஷவாயு விபத்து வழக்கில் மேல்முறையீடுச் செய்ய தாமதித்த சி.பி.ஐ மீது உச்சநீதிமன்ற அரசியல் சட்ட கடும் விமர்சனத்தை வெளியிட்டது.
சி.பி.ஐ 16 வருடங்களாக எங்கே சென்றது? என தலைமை நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
போபால் விஷவாயு விபத்தில் குற்றவாளிகளை 1996-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வேண்டுமென்றே செய்யாத இனப்படுகொலை குற்றத்திற்காக தண்டித்தது. இந்த தண்டனைக்கு எதிராக 16 வருடங்களுக்கு பிறகு சி.பி.ஐ சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்தது உச்சநீதிமன்ற பெஞ்ச். குற்றஞ்ச்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ சுமத்திய இனப்படுகொலை குற்றத்தை ரத்துச்செய்த உச்சநீதிமன்றம் கொலைக் குற்றத்தின் தண்டனை வரம்புக்குள் வராத வேண்டுமென்றே செய்யாத இனப் படுகொலைக்கான தண்டனையை விதித்தது. இதன் அடிப்படையில் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் கவனக் குறைவாகும். இதற்கெதிராகத்தான் தற்பொழுது சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளது.
சி.பி.ஐ காலதாமதத்தை குறைகூறிய உச்சநீதிமன்ற பெஞ்ச் 16 வருடங்கள் எங்கே சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியது. ஆனால், இக்கேள்விக்கு தெளிவான பதிலை அளிக்க சி.பி.ஐக்காக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வஹன்வாதிக்கு இயலவில்லை. இந்த வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் ஒரு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த ஆலை விஷயத்தில் 1982-ம் ஆண்டிலிருந்தே சட்டவிரோத நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதான் 1984-ல் மிகப் பெரிய விபத்துக்கு வழியேற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே விபத்துக்குக் காரணமாக அமைந்தன என்று வாஹன்வதி குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அம்சங்களில் பெருமளவு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆலை வடிவமைப்பும் விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த போபால் விஷவாயு விபத்தில் 15 ஆயிரம்பேர் மரணித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment