அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) , சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவர்களை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள் சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
தமிழ் முஸ்லிம் இணையதள வரலாற்றில் முதன் முறையாக கூத்தாநல்லூர் முஸ்லிம் இணையத்தளம் மற்றும் முத்துபேட்டை இணையத்தளம் இணைந்து வழங்கும் "சமுதாயத்தின் குரல்" கேள்வி பதில் பகுதியில் SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி அவர்கள், வாசகராகிய உங்களுடைய கேள்விக்கு பதில் தர இருக்கிறார், இன்ஷா அல்லாஹ்.
வாசகர்களே தங்களுக்கு SDPI கட்சி பற்றியோ அதன் தேர்தல் நிலைப்பாடு பற்றியோ நம் இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தை பற்றி கேள்விகளை எங்களுக்கு உடன் அனுப்பி வையுங்கள், இன்ஷா அல்லாஹ் உங்கள் கேள்விக்கான பதிலை சகோதரர் தெஹ்லான் பாகவி அவர்கள் விரைவில் தர இருக்கிறார்.
நிபந்தனைகள் :
- வாசகர்கள் கேள்வி கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். கண்ணியம் இல்லாத கேள்விகள் நீக்கப்படும்.
- மற்ற அமைப்புகளை குறை கூறுவதை தவிர்த்து கேள்வி கேளுங்கள்.
- தாங்கள் கேள்வி சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
- தாங்கள் கேள்வி வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 2 -April -2011
உங்கள் கேள்வியை பதிவு செய்ய இதை அழுத்தவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment