தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன. தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் புறம்போக்கு கட்சியான பா.ஜ.க ஏதோ அடுத்து தாங்கள்தாம் ஆட்சிக்கு வருவதைப் போல கனவு கண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. புறம்போக்கு கட்சி எனக் கூறக் காரணம், தமிழகத்தின் பிரபலமான எந்த சிறுகட்சியும் கூட இவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் இருக்கிற மானமும் போய்விடும் என்ற பயம்தான் காரணம். இத்தகையதொரு கட்சியின் வெற்று தேர்தல் அறிக்கைக் குறித்து விமர்சிப்பதே நேரத்தை வீணடிப்பது என்றாலும், ஏதோ தாங்கள் பரிசுத்தவான்கள் என வேடமிட்டு சில அறிக்கைகளை வெளியிடுவதால் எவரேனும் இவர்களை நம்பிவிடக் கூடாது என்பதற்காக இவர்களது தேர்தல் அறிக்கையின் கோமாளித் தனத்தைக் குறித்து சிறிது அலசுவோம்.
மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:
தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை அகற்றி விட்டு, உன்னதமான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி இருந்த 5 ஆண்டுகளில் இந்தியாவை கொள்ளையடித்து, அறிவு சூன்யமாக்கி கற்காலத்திற்கு கொண்டு செல்லவிருந்த வேளையில் ஆட்சியை விட்டு விரட்டப்பட்டவர்கள்தாம் இவர்கள்.இந்நிலையில் இவர்கள் எப்படி 44 ஆண்டுகளாக நடந்துவரும் இருண்ட ஆட்சியை அகற்றப் போகிறார்கள். சக மனிதர்களையே கொடூரமாக கொலைச் செய்த அக்கிரமத்தை குஜராத்தில் அரங்கேற்றிய இந்த மாபாதகர்களால் எவ்வாறு ஒளிவீசும் ஆட்சியை கொடுக்கவியலும்?
*தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.
காஞ்சிக் காமகோடியும் இதைத்தான் சொல்றான். திராவிடக் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி.
*சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அப்படியானால் அட்டவணைப்படுத்தப்பட்ட இந்து சமூகத்தைச் சார்ந்த 44 சாதியினர் பெறும் சலுகைகளெல்லாம் என்னாச்சு! அவங்க இந்து கிடையாதா? அவர்களுக்கு கிடைத்த சலுகையெல்லாம் இனி சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்குமா? இல்லை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான சலுகைகளை பிடுங்கும் முயற்சியா?
*அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்
என்னா அக்கறை போங்க! சமஸ்கிருதத்தை நடைமுறைப்படுத்தாமலிருந்தால் சரி! சமஸ்கிருதம்தான் தமிழ் என்று மாறிவிட்டதோ?
*மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.
பேனா, பென்சில் கூட வாங்கமுடியாத அளவுக்கு தமிழன் என்ன பிச்சைக்காரனா?
*அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.
பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை இதிலிருந்தே புரிந்துக் கொள்ளலாம். தி.மு.கவும், அ.தி.மு.கவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட பொழுது, இலவசங்களை அள்ளி வழங்கி தமிழர்களை சோம்பேறிகளாகவும், கையேந்துபவர்களாகவும் மாற்றுகிறார்கள் எனக் கூச்சல் போட்ட பொன்.ராதாகிருஷ்ணன், தற்பொழுது தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அதனை அப்படியே காப்பியடித்துள்ளார். கொள்கையே இல்லாத கட்சி என்பதற்கு இதுவே உதாரணமாகும்.
*6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.
கூடவே கிளிஜோஷியம், வாஸ்துவையும் கற்றுக்கொடுக்க வேண்டியதுதானே! ஹிந்துத்துவா மாநிலமாக மாற்ற நடக்கும் முயற்சி! தமிழர்களே ஜாக்கிரதை!
*வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த சத்தான உணவு என்பது மருத்துவர்களின் கூற்று. தண்ணீர் கலந்த பசும் பாலை கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் முயற்சியா?
*சுய உதவிக் குழுக்கள் மூலம் ‘நாப்கின்’கள் தயாரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.
ஏற்கனவே காண்டம் வழங்கியது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதில் வேறு நாப்கின் சப்ளையா? தமிழக மகளிரை இப்படி வேற கேவலப்படுத்தணுமா?
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்
அரபு நாட்டு சட்டம்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே குஜராத்தில் முஸ்லிம் பெண்களை வன்புணர்வுச் செய்து, வயிற்றைக் கிழித்து கருவிலுள்ள சிசுக்களையே தீயிலிட்டு பொசுக்கிய உங்களுக்கு என்னத் தண்டனையை தரணும்?
*இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்
முதல்ல உனது கட்சிக்காரன்கிட்ட ஒழித்துவிட்டு மக்களுக்கு உபதேசம் செய்!
நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகாவில் உனது கட்சிதான் ஆட்சி செய்யுது. முதல்ல காவிரி பிரச்சனையை தீர்க்க வழியைப்பாரு. ஒகேனக்கல்லில் வேற உங்கட்சிகாரன் பிரச்சனையை கிளப்பிவிட்டுட்டான்.
*பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.
‘குடி குடியைக் கெடுக்கும்’ சொல்றாங்க. இவங்க என்னன்னா விவசாயிகள் நலன்கருதி கள் இறக்குவாங்களாம். ஒன்றைக்கூட ஒழுங்கா சொல்லமுடியல. இதுலவேற இருண்ட ஆட்சியை அகற்றப் போறாங்களாம்.
*அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
ஏற்கனவே இந்தியாவை 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பொழுது அடிமாட்டு விலைக்கு அரசு நிறுவனங்களை விற்றுத் தொலைச்சாச்சு!இப்ப சூப்பர் மார்கெட் நடத்தப் போறாங்களாம். வால்மார்ட், கேரிஃபோருடன் ஒப்பந்தம் போட்டார்களோ என்னவோ?
*அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.
அனைத்து சாதியினரும் கோயில்ல போய் ஒன்றாக கும்பிடவே முடியலே. மாறி மாறி சண்டைதான் நடக்குது. இதுலவேற அர்ச்சகர்களாக பணியாற்றப் போறாங்களாம்!
*ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசு மாடு இலவசமாக கொடுக்கப்படும்
கூடவே கோமியம் தொழிற்சாலை துவக்குவோம்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே!
*கச்சத் தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்
கார்கில் போரில் சவப் பெட்டியில கூட ஊழல் செய்தது போதாதா?இப்ப கச்சத்தீவை மீட்பதற்காக போரா?
*வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.
இப்பத்தான் பூனைக்குடி வெளியே வந்திருக்கு.ஜாதிக் கொடுமை தாங்க முடியாமத்தானே மக்கள் வேற மதத்துக்கு போகிறார்கள்.அவர்களுடைய உரிமையை தடுப்பதுதான் கிரிமினல் குற்றம்.
பொன்.ராதாகிருஷ்ணன் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்.குமரி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்திற்கு மேல்ஜாதி ஹிந்துக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். ஜாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் அய்யா வைகுண்டர் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி தனியாக ஒரு மதத்தையே உருவாக்கினார். ஜாதிக் கொடுமைகளால் குமரி மாவட்டத்தில் பெருமளவிலான நாடார்கள் கி்றிஸ்தவ மதத்திற்கு மாறினர். சொந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்துவிட்டு மதமாற்றச் சட்டம் கொண்டுவர வேண்டுமென அறிக்கைவிடும் பொன்.ராதாகிருஷ்ணன் உயர்ஜாதி பாசிச பரிவாரத்திற்கு கொத்தடிமை என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்தமாக பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை தமிழர்களை முட்டாள்களாக்கும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும், தமிழகத்தை இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் அறிக்கையாகும்.
இவர்கள் ஒரு சீட்டைக் கூட தமிழகத்தில் பிடிக்க முடியாது என்பது வேறு விஷயம். ஆனால், இவர்கள் மீது பரிதாபப்பட்டு ஆறுதல் வாக்குகளை கூட அளித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையின் முட்டாள் தனத்தை இங்கே விளக்கினோம்.
0 கருத்துரைகள்:
Post a Comment