Monday, March 7, 2011

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி:துருக்கியில் இரண்டு பத்திரிகையாளர்கள் சிறையிலடைப்பு

அங்காரா,மார்ச்.7:துருக்கியில் ஜனநாயக அரசை கவிழ்க்கும் முயற்சிக்காக சதித்திட்டம் தீட்டிய இரண்டு பிரபல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

அஹ்மதி ஸிக், நதீம்நைனர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் ஆவர். கடந்த வியாழக்கிழமை டோனில் ஒரு தனியார் அறையில் வைத்து சதித்திட்டம் தீட்டிய பொழுது இவர்கள் உள்பட எட்டு பத்திரிகையாளர்களை துருக்கி போலீஸ் கைது செய்தது.

அடுத்த ஜூன் மாதத்தில் பொதுத்தேர்தல் துருக்கியில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான ஏ.கெ.கட்சிக்கு எதிராக எர்கனகோண் குரூப் என்ற பெயரில் செயல்படும் தீவிர தேசிய-மதசார்பற்றவாதிகளின் தலைமையில் நடைபெறும் சதித்திட்டங்களை குறித்து விசாரணைச் செய்வதின் ஒரு பகுதியாகத்தான் இந்த கைது என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

எர்கனகோண் குழுவினரை ஆதரித்தும், பிரதமர் உருதுகானை எதிர்த்தும் தொடர்ந்து செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதியவர்தாம் ராணுவ ஆதரவாளரான அஹ்மதி ஸிக்.

வருகிற பொதுத் தேர்தலில் ரஜப் தய்யிப் உருதுகானின் தலைமையிலான நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி(ஏ.கெ.கட்சி) மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza