Monday, March 7, 2011

ஷேக்கா லுப்னா அரபுலகில் செல்வாக்கு மிகுந்த பெண்மணி

துபாய்,மார்ச்.7:அரபுலகில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரான ஷேக்கா லுப்னாவை சி.இ.ஒ மாத இதழ் தேர்வுச் செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஓலயான் ஃபினான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லுப்னா ஓலயான் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜெபல் அலி ஃப்ரீஸோன் அதாரிட்டி சி.இ.ஒ ஸல்மா ஹாரிப் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

லெபனானில் அல் வலீத் ஃபவுண்டேசன் தலைவர் டாலியா அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆலோசகரான லைலா ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மாநிலத்தின் ஆட்சியாளரான டாக்டர்.ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் சகோதரியின் மகளான ஷேக்கா லுப்னா கடந்த 2004-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டார்.

கடந்த போப்ஸ் பத்திரிகை உலகின் மிகவும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்மணிகளில் ஒருவராக ஷேக்கா லுப்னாவை தேர்வுச்செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza