Thursday, March 17, 2011

சிறை அறை மண அறையாக மாறுமா?


jail-bars-prison-cartoon-picture-thumb
பாட்டியாலா:மரணத் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளிடம் தண்டனை விதிக்கப்படுமுன் அவர்களது கடைசி என்ன? என வினவப்படுவது வழக்கமான ஒன்று. இது ஒரு அதிகாரப்பூர்வ சடங்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதிபீடம் இதற்கு அனுமதியளித்துள்ளது.
ஆனால், பாட்டியாலா மத்திய சிறையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு பெண், விசித்திரமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதே சிறையில் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் தனது கணவருடன் சிறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென்பதே அக்கோரிக்கை.
திருமணமாகி எட்டு மாதம் கழியும் பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வாரிசை உருவாக்க உதவும் தாம்பத்யம் தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என இப்பெண் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் தூக்கிலிடப்பட்டால் தங்களுக்கு வாரிசு இல்லாத சூழல் உருவாகிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவருடைய கோரிக்கைக்கு எதிராக மற்றொருவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர், ஐந்து ஆண்டுகளுக்கு சிறையிலடைக்கப்பட்டுள்ள தம்பதிகளால் 5 ஆண்டுகளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய் பிணைத்தொகை கேட்டு கடத்தப்பட்டு பின்னர் கொலைச் செய்யப்பட்ட குழந்தையின் தந்தையாவார்.
“அடுத்தவரின் குழந்தையை கொடூரமாக கொலைச் செய்தவர்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவோ  வளர்க்கவோ தகுதியில்லை” என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் கொலைச் செய்யப்பட்ட குழந்தையின் தந்தை.
இவருடைய வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீதிபீடத்தின் முன்னால் கொண்டுவரப்பட்ட குழந்தையின் தந்தை யார்? என்பதை அறிய மன்னர் சாலமன் விதித்ததுபோல் விசித்திரமான தீர்ப்பையொன்றும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் அளிக்கவில்லை. மாறாக இதனைக் குறித்து வல்லுநர்களின் கருத்தினை ஆராயும் நோக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஆலோசகர் (அமிக்கஸ் க்யூரி) ஒருவரை நியமித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza