சென்னை:கடந்த 15-ஆம் தேதி சென்னையில் கூடிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் செயற்குழுவில் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் குளறுபடிகளை நீக்கவும் அ.இ.அ.தி.மு.க உறுதி அளித்ததன் பேரில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன், பாப்ரி மஸ்ஜித் வழக்கு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வரும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது எனவும், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிப்பதாகவும், புதுச்சேரியில் ரங்கசாமியின் NR காங்கிரஸ்-அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் துணைத் தலைவர் எம்.ஐ.முஹம்மது முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment