ஸ்ரீநகர்:கஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் கஷ்மீர் அரசுக்கு புதுடெல்லி தலையிடுகிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமுலிருக்கும் பொது பாதுகாப்புச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்.
கடந்த ஆண்டு கஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கொண்டுவந்த எட்டு அம்ச திட்டத்தில் அரசியல் கைதிகள் விடுதலைச் செய்யப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார். மேலும், மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு கஷ்மீருக்கு வருகைத்தந்த பொழுதெல்லாம் இதனை தெரிவித்திருந்தது.
கஷ்மீர் சட்டமன்றத்தில் பல தடவை இப்பிரச்சனை முன்வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவரைக்கூட விடுதலைச் செய்யவில்லை. மாறாக, பொதுமக்களை கைது செய்வது தொடரத்தான் செய்கிறது. இவ்வாறு கிலானி தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment