Monday, March 28, 2011

இரு நாட்டு தலைவர்கள் வருகை: மெகாலி மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு!

இந்தியா -பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.ஆட்டத்தினை காண இரு நாட்டு தலைவர்கள் வருவதால் பஞ்சாப் மாநிலம் முழுவதும் தேசிய பாதுகாப்புப்ப‌டையினரின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ப‌ோட்டி பஞ்சாப் மாநிலம்‌ மொகாலியில் வரும் 30-ம் தேதி நடக்கிறது. ‌போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. இதில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டியைக் காண இந்தியா வருமாறு பிரதமர் மன்மோகன்சிங் , பாகிஸ்தான், பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரி ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் கிலானி போட்டியை காண இந்தியா வருவதாக உறுதியளித்துள்ளார். கிலானி இந்தியா வருகை‌‌யையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிலானி தங்கவிருக்கும் தாஜ் ஹோட்டல் முழுவதும் தேசிய பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தாஷ் ‌ஹோட்டலைச்சுற்றி 1200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முழுவதும் தேசிய பாதுகாப்புப்ப‌டையினரின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அது மட்டுமின்றி போட்டி நடைபெறும் மைதானத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. பாராமிலிட்டரியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza