Thursday, February 17, 2011

வேலை நிறுத்தம் கூடாது! எகிப்து ராணுவம் எச்சரிக்கை

கெய்ரோ: தொடரும் வேலை நிறுத்தங்களால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்; அதனால் ஏற்படும் இழப்பு பெரிய அபாயமாக முடியும்' என்று எகிப்து ராணுவம் எச்சரித்துள்ளது.
ஆனால்  ராணுவத்தின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், நேற்று எகிப்தின் பல பகுதிகளில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்துக்கு பின், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும் என, ராணுவ அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் 14ம் தேதி, நாட்டின் அனைத்து அரசு நிறுவன ஊழியர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செய்தி:இந்நேரம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza