Thursday, February 17, 2011

சிரியாவில் கடத்தப்பட்டார் சவூதி இளைஞர்: நாலு இலட்சம் ரியால் பிணை கோரிக்கை!

சவூதி இளைஞர் ஒருவர் சிரியாவில் கடத்தப்பட்டுள்ளார் என்றும் அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் 4 இலட்சம் ரியால்களைக் கோரியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சவூதியின் தபூக் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவப் பரிசோதனைக்காக சிரியத் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் சென்று தங்கியிருந்த போது, 18 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் வந்த ஒரு மர்மத் தொலைபேசி "நான்கு இலட்சம் ரியால்கள் பிணையத் தொகை வேண்டும்" என்று கேட்டதாக கடத்தப்பட்டவரின் உறவினர் அத்திக் அல் எனீசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து உரிய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சவூதி மற்றும் சிரியா காவல்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza