Thursday, January 20, 2011

துனீசியாவில் போராட்டம்: அரபு உலகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - அம்ர் மூஸா

கெய்ரோ,ஜன.20:துனீசியாவில் நடந்துவரும் நிகழ்வுகள் அரபு உலக ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட பலத்த எச்சரிக்கை என அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் மோசமான சூழலில் சென்றுக் கொண்டிருக்கும் பொருளாதார நிலைமையும், துனீசியாவின் போராட்டத்திற்குமிடையே தொடர்புண்டு. தற்போதைய பொருளாதார சூழலால் மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எகிப்தில் நடந்த அரபு லீக் மாநாட்டில்தான் அம்ர் மூஸா இதனை தெரிவித்தார்.

23 வருட கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டு அதிபராகயிருந்த பின் அலியை நாட்டை விட்டு வெருண்டோடச் செய்தது துனீசியாவில் நிலவிய பட்டினி மற்றும் வேலையின்மையின் காரணமாக வீதியில் இறங்கிப் போராடிய இளைய தலைமுறையினர்தான் என அம்ர் மூஸா தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza