Wednesday, November 17, 2010

உருது அகாடமி கலைப்பு:கர்நாடக அரசின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

பெங்களூர்,நவ.16:கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த உருது அகாடமியை கலைத்ததை நியாயப்படுத்தி எடுத்துவைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என அகாடமியின் சேர்மன் கலீல் மஃமூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.கவை சார்ந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பேராசிரியர் மும்தாஸ் அலிகானின் தலைமையில் நடந்த சதித்திட்டம்தான் அகாடமியை கலைத்துவிடுவதற்கு காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநில சிறுபான்மை கமிஷன், ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் தலைவர்கள் மீது பா.ஜ.க அரசு கெட்ட எண்ணத்துடன் கூடிய குற்றச்சாடுகளின் தொடர்ச்சிதான் உருது அகாடமிக்கு எதிரான திட்டமிட்ட இந்த நடவடிக்கை என மஃமூன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 27 முதல் 31 வரை பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நடக்கவிருந்த உலகளாவிய உருது மாநாட்டின் அமைப்புக்குழுத் தொடர்பாக மாநில அரசிடனும், முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. கலாச்சாரத் துறையின் பொறுப்பை வகிக்கும் முதல்வர் எடியூரப்பாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக மாநாட்டிற்கான நிதி துவக்க நிகழ்ச்சியில் முதல்வரை தலைமை வகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

முன்னர் நடந்த மாநாட்டு அமைப்புக்குழு உருவாக்கம் தொடர்பான கூட்டத்தில் வைத்து முன்னாள் முதல்வர் தரம்சிங்கை தலைவராகவும், மும்தாஸ் அலிகானை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

எல்லா அரசியல்கட்சி பிரதிநிதிகளுக்கும் அமைப்புக் குழுவில் முக்கிய பதவிகளை வழங்கி உட்படுத்தியிருந்தோம். கன்னட கலாச்சாரத் துறையின் மேல்மட்டத்தில் நடத்திய மாற்றம்தான் உருது அகாடமியை கலைத்துவிடுவதற்கு காரணமானது. ஏராளமான பணிகளை நடத்திவரும், மொழி பிரச்சாரத்திற்காக மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடுச்செய்த அகாடமியை கலைத்ததற்கு எவ்வித நியாயத்தையும் கூறவியலாது. இவ்வாறு மஃமூன் தெரிவித்துள்ளார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza