Wednesday, November 17, 2010

டெல்லியில் கட்டிடம் இடிந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 64 ஆனது

புதுடெல்லி,நவ.16:தெற்கு டெல்லியில் 5 மாடிக் கட்டிடம் தகர்ந்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 80 பேர்களுக்கு காயமேற்பட்டுள்ளது. 30 பேர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக சந்தேகமுள்ளதால் தற்பொழுதும் மீட்புப்பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

நேற்று இரவு 8.15க்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொழிலாளிகள் வாடகைக்கு எடுத்து வசிக்கும் இக்கட்டிடம் இடிந்து வீழ்ந்த பொழுது உள்ளே ஏராளமானோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் மேற்குவங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

யமுனா நதிக்கரையின் அருகே அமைந்துள்ள இக்கட்டிடம் 15 வருட பழமையானதாகும். யமுனா நதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் கட்டிடத்திற்கு ஆபத்து ஏற்பட்டது என விபத்துக் காரணமாக அருகிலிலுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza