Wednesday, December 1, 2010

விக்கிலீக்ஸ்:உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்

ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை 'ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், 'வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், 'ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு 'பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.

*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza