Monday, November 29, 2010

அல்காயிதாவுடன் தொடர்பு:சவூதியில் 149 பேர் கைது

ரியாத்,நவ.28:கடந்த எட்டு மாதங்களுக்கிடையே அல்காயிதா இயக்கத்துடன் தொடர்புடைய 149 பேரை கைதுச் செய்துள்ளதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கெதிரான தாக்குதல் திட்டங்களை முறியடித்து விட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் இப்னு துர்க்கி தெரிவித்துள்ளார்.

இவர்களிடமிருந்து 22.4 லட்சம் ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. ஹஜ்-உம்ரா புனித யாத்திரைக்கிடையே தங்கள் கொள்கைகளை பரப்புவது மற்றும் புனித யாத்ரீகர்களிடம் பணம் சேகரிப்பது உள்ளிட்ட வேலைகளில் இவர்கள் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்தார்.

கைதுச் செய்யப்பட்ட 149 பேரில் 124 பேர் சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்களாவர். 25 பேர் இதர நாடுகளைச் சார்ந்தவர்கள். இவர்களைக் குறித்து தகவல் கிடைத்தபொழுது ஆட்களைக் கொல்வதற்கான இவர்களின் திட்டம் இறுதிக் கட்டத்தில் இருந்தது. திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்திய ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிடிக்க இண்டர்போலின் உதவியும் நாடப்பட்டுள்ளது. இணையதள ஃபாரங்களை தங்களது கொள்கைகளை பரப்புவதற்காக இவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

புனித யாத்ரீகர்களுடன் கலந்து இவர்கள் சவூதியில் நுழைந்துள்ளனர். இவர்களின் நிதிப் பின்னணிக் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு மன்சூர் இப்னு துர்க்கி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza