Thursday, November 18, 2010

குவாண்டனாமோ சித்திரவதை: பிரிட்டிஷ் அரசு நஷ்ட ஈடு!

குவாண்டனாமோ சிறையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டு சித்திரவதை செய்யப்பட்ட 12 பேரை பிரிட்டிஷ் நீதிமன்றம் விடுவித்தது. இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் எதையும் அளிக்க பிரிட்டிஷ் அரசு இயலாமல் போனதை அடுத்து அவர்களை விடுதலை செய்து பிரிட்டிஷ் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இவர்களில் 6 பேர் மனித உரிமை ஆர்வல அமைப்பு ஒன்றை அணுகித் தம்மை அநியாயமாகச் சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்கப் படையினரின் சித்திரவதைக்கு உடந்தையாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசு மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவித்தனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தால் அரசு தனது உளவுப் படையினரின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வரும் என அஞ்சி பல மில்லியன் பவுண்ட்கள் நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்துள்ளது. இதனை யு.கே அரசின் நீதித் துறை செயலர் இன்று அறிவிப்பார் எனத் தெரிகிறது.

NEWS : இந்நேரம்.COM

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza