Tuesday, October 5, 2010

9/11 தாக்குதல் - விசாரனை நடத்த கோரிக்கை அஹமது நஜாத்

டெஹ்ரான்,அக்.4: 9/11 அன்று அமெரிக்காவின் வர்த்தகமையம் மற்றும் பாதுகாப்பு மையமான பெண்டகன் ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதலைக் குறித்து உண்மையை வெளிக்கொணர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஈரான் அதிபர் மஹ்மூத் நஜாத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்காசியாவில் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றத்தான் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இத்தாக்குதலை பயன்படுத்தினார்கள் என நஜாத் குற்றஞ்சாட்டினார்.

தாக்குதலுடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்கா விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என நஜாத் கோரியுள்ளார்.

அமெரிக்காவிற்கு தேவை மேற்காசியாவின் அளவுக் கடந்த சொத்தும் இப்பகுதியில் ஆதிக்கமுமாகும். மேற்காசிய நாடுகளின் ராணுவம் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு நஜாத் கூறியுள்ளார்.

எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முறியடித்து தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினார்கள் என்ற அமெரிக்காவின் கூற்றில் சந்தேகமுண்டு என கடந்த மாதம் ஐ.நா பொதுச்சபையில் நஜாத் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தகர்ந்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார சூழலிலிருந்து திசைத்திருப்ப அமெரிக்காவின் ஆட்சியாளர்களே நடத்திய தாக்குதலாகத்தான் செப்.11 தாக்குதலைக் குறித்து தான் நம்புவதாக அந்த உரையில் நஜாத் குறிப்பிட்டிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza