பாகிஸ்தான் எல்லையொட்டிய ஹெல்மந்த் மாகாணத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான் போராளிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது என நாதலி மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்மத்துல்லாஹ் ஸாதத் கூறுகிறார். ஆனால், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவி மக்களாவர். ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் விமானத் தாக்குதலை நிறுத்தவேண்டும் என ஆப்கான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் போராளிகள் மீதுதான் தாக்குதல் நடத்துகிறோம் என நேட்டோ கூறிவருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில், இந்த வருட முதல் பகுதியில் அப்பாவிகள் மீதான அந்நிய ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதலில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துரைகள்:
Post a Comment