Saturday, August 16, 2014

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் பேருந்து நிலையம் எதிரே தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று (15.08.2014) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தியாகிகளை  கெளரவப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள், பொதுக்கூட்டங்கள்   என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பாப்புலர்  ப்ரண்டின் தேசியத் தலைவர் சரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Wednesday, August 13, 2014

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2014-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களைப் போலவே  இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 10.08.2014 அன்று நமதூர் மதரஸா வழாகத்தில் பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Friday, August 1, 2014

புதுவலசையில் "இஃப்தார் கிட்" விநியோகம்

பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் கடந்த புனித ரமலான் மாதத்தில் அகில இந்திய அளவில் " இஃப்தார் கிட்" எனப்படும் நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நமதூரில் ஃபித்ரா விநியோகம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா எனப்படும் நோன்பு பெருநாள் தர்மம் நமதூரில் தகுதி உடையோருக்கு விநியோகிக்க பட்டு வருகிறது.

Monday, July 21, 2014

அரபு சமூகத்திற்கும் பொறுப்புண்டு!

வரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.

காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!

தோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Saturday, July 19, 2014

உலகில் 3 இல் ஒரு பகுதி ஏழைகள் இந்தியாவில்!

புதுடெல்லி : உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஐ.நா. 2014ஆம் ஆண்டின் “மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டெல்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டார். 

Thursday, July 3, 2014

சீனாவில் நோன்பு நோற்கத் தடை

பெய்ஜிங் : சீனாவில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதைச் சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் முஸ்லிம்கள் வசிக்கும் வடமேற்கு பிராந்திய ஸிங்ஜியாங் பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் இணைய தளங்கள் மூலமும் அரசு முகாமைகள் மூலமும் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரமலானில் உள்ளத்தை புதுப்பிப்போம்!

நம்பிக்கையாளர்களுக்கு ஆத்ம பரிசோதனைக்கும், சுய விமர்சனத்திற்குமான அபூர்வமான வாய்ப்பே ரமலான்.சுய விசாரணைகள் நம்பிக்கையாளரை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.வழி கேட்டிலிருந்து நேர்வழியை நோக்கியும், நேரான வழியில் மேலும் உறுதியுடன் செயல்படவும் ரமலான் மனிதனை வழி நடத்துகிறது.ஒரு நம்பிக்கையாளனின் வாழ்க்கை என்பது சுவனத்தை நோக்கிய பயணமாகும்.மறுமையில் விசாரணை வரும் முன்னர் அடிக்கடி தன்னை சுயமாக விசாரித்துக்கொள்ளவும், தனது செயல்களை நீதியின் தராசில் சீராக தூக்கிப்பார்த்து சரிச்செய்து கொள்ளவும் கற்பிக்கப்பட்ட சமூகமே முஸ்லிம்கள்.இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர்(ரலி) அவர்களின் பிரபலமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:’நீங்கள் விசாரிக்கப்படும் முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அருட்கொடைகளின் வசந்தகாலமான ரமலானில் நம்பிக்கையாளர்களின் விசாரணை பெரும்பாலும் தன்னைக் குறித்தே அமையும்.

Friday, June 20, 2014

ஏர்வாடிதர்ஹாவில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை


எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அலங்கார வாயில் அருகே பல ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித  இடையூறு இல்லாமலும்,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி  இவர்களது கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Dua For Gaza