Wednesday, November 27, 2013

ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைத்து அகலபடுத்த கோரி தடையை மீறி நடைபயணம் எஸ்டிபிஐ கட்சியினர் கைது!

இராமநாதபுரம் ஆற்றாங்கரை – கோப்பேரி மடம் சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ சார்பில் நடைபயணம் அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அழகன்குளத்தில் தடையை மீறி நடைபயணம் ன்று (26.11.2013)துவங்கியது. 

திருவாடனை தொகுதி தலைவர் ஜஹீருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்,மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான்,எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹிஜ்ரி, தொகுதி செயலாளர் ரியாஸ் அஹமது,இணைச்செயலாளர் கஜினி முஹம்மது,நூருல் ஹக்,பனைக்குளம் கிளைத்தலைவர் பாசித் அலி,செயலாளர் இஜாஸ் அஹமது,அழகன் குளம் கிளைத்தலைவர் அப்துல் ஜமீல்,செயலாளர் உமர்,சித்தார்கோட்டை கிளைத்தலைவர் ரைசுதீன்,தேவிப்பட்டிணம் கிளைத்தலைவர் ஷாஜஹான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டு தேவிப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு மஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

Friday, November 22, 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர்கள் J.ரசின், S.இல்யாஸ் மற்றும் பொருளாளர் A.அஹமது பைசல் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்து கீழ்காணும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

முந்தைய தலைமுறையை விட தற்போதைய குழந்தைகளின் உடல் வலு குறைவு!-ஆய்வில் தகவல்!



லண்டன் : உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளிடம் நடத்திய ஆய்வொன்று, தற்காலக் குழந்தைகளில் பலரால், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் போல இளம் வயதினராக இருந்த காலத்தில் ஓடியது போல அதே போன்ற வேகத்தில் ஓட முடியவில்லை, என்பதைக் கண்டறிந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 28 நாடுகளிலிருக்கும் சுமார் 2.5 கோடிக்கும் மேலான குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு விவகாரம்: சிக்கலில் பா.ஜ.க!



புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே மீதமுள்ள நிலையிலும், நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ள சூழலிலும் குஜராத் முதல்வரும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ரகசியமாக உயர் அதிகாரிகள், தனிநபர்களை கண்காணித்த விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் பா.ஜ.க தவித்து வருகிறது.
சாஹிபிற்காக(மோடி) உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, பெங்களூரைச் சார்ந்த ஆர்க்டிக்டான இளம்பெண்ணையும், குஜராத்தில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியையும் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை போலீசிடம் ஒப்படைத்த செய்தியை இணையதள நியூஸ் போர்டல்களான குலைல் மற்றும் கோப்ரா போஸ்ட் ஆகியன வெளியிட்டது பா.ஜ.கவிற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

2011- ஆம் ஆண்டு கலவரம்:பா.ஜ.க எம்.எல்.ஏ தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!



ருத்ரப்பூர் (உத்தரகாண்ட்) : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக ருத்ரப்பூர் நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் ருத்ரப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்தக் கலவரத்தை தூண்டியதாக ராஜ்குமார் துக்ரால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் துக்ராலை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சிபிசிஐடி போலீஸார் ருத்ரப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை! திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.11.2013) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை வகித்தார்.

மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் அனைவரையும் வரவேற்றார். 

மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமிர் ஹம்சா, ரத்தினம், அப்துல் சத்தார், அபுதாகிர், செய்யது அலி, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Sunday, November 17, 2013

நச்சு மாசுக்களால் உலக அளவில் 20 கோடி பேர் பாதிப்பு!



லண்டன்: உலகளவில் இருபது கோடிக்கும் அதிகமான மக்கள் நச்சு மாசுக்கள் காரணமாக பாதிப்படையக் கூடிய அபாயகரமான நிலையில் உள்ளனர் என்று சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையில் உலகளவில் மிகவும் நச்சுத்தன்மை அபாயம் வாய்ந்த பத்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நியூயார்க்கிலுள்ள பிளாக்ஸ்மித் நிறுவனமும், சுவிட்சர்லாந்திலுள்ள கிரீன் கிராஸ் அமைப்புமே இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!





பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான்,உடற்பயிற்சி வகுப்புகள்,ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள்,இரத்த தான முகாம்கள்,அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

Wednesday, November 13, 2013

எஸ்டிபிஐ (SDPI) சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்


இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை கண்டித்தும்,இந்த மாநாட்டிற்கு இந்திய அரசின் சார்பில் பிரதமர் உட்பட எந்த பிரதிநிதியும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட  எஸ்டிபிஐ(சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் பரமக்குடியில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் புதிய திருப்பம்!


patna

பாட்னா: பீகாரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்தியன் முஜாஹிதீன் மீது குற்றம் சாட்டப்பட்ட இச்சம்பவத்தில் புதிய கைதுகளை தொடர்ந்து வழக்கு புதிய திசையை நோக்கி பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜார்கண்டில் தன்பாத் மாவட்டத்தில் ராஜு ஸாவு என்பவர் இவ்வழக்கில் புதியதாக கைது செய்யப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ.விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பீகார் போலீஸ் ராஜு ஸாவுவை தன்பாத்தில் ஜாரியாவில் வைத்து கைது செய்தது.

Dua For Gaza